search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்
    X

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தத்துக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல்

    வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக தமிழகத்தில் 20 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. #VoterList #TN
    சென்னை:

    தமிழகத்தில் 2019-ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்காக கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்தப்பணிகள் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்று வந்தன.

    பெயர், முகவரி போன்றவற்றை திருத்துவதற்காக வாக்காளர்களுக்காக தமிழகம் முழுவதும் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. 1.1.2019 அன்று 18 வயதை பூர்த்தி செய்யக்கூடிய நபர்களும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இந்த முகாமில் விண்ணப்பித்தனர். இந்த பணிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முடிவடைந்தன.

    அந்த வகையில், தமிழகம் முழுவதும் 1.9.2108 முதல் 31.10.2018 வரை பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்டார்.



    அதன்படி தமிழகம் முழுவதும் இவற்றுக்காக அலுவலகங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மொத்தம் 20 லட்சத்து 7 ஆயிரத்து 412 பேர் விண்ணப்பித்துள்ளனர். அலுவலகங்கள் மூலமாக 18 லட்சத்து 87 ஆயிரத்து 283 பேரும், ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 129 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் 97 ஆயிரத்து 996 விண்ணப்பங்கள், சென்னையில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 434 விண்ணப்பங்கள், காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன.

    பெயர் சேர்ப்புக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 74 ஆயிரத்து 984 விண்ணப்பங்களும், சென்னை மாவட்டத்தில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரத்து 286 விண்ணப்பங்களும் தாக்கல் ஆகியுள்ளன. தமிழகம் முழுவதும் பெயர் சேர்ப்புக்காக மட்டும் 13 லட்சத்து 11 ஆயிரத்து 861 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.

    அதிகபட்சமாக சென்னையில் 92 ஆயிரத்து 863 விண்ணப்பங்களும், குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 8,631 விண்ணப்பங்கள் தாக்கல் ஆகியுள்ளன.

    அனைத்து வகை விண்ணப்பங்களையும் சேர்த்தால், அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 956 விண்ணப்பங்களும், அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 297 விண்ணப்பங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

    இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் முறையே பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதி இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். வீடுகளுக்கு தேர்தல் அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்ப்பு பணியை மேற்கொள்வார்கள்.

    பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு இனிமேலும் விண்ணப்பங்களை நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். ஆனால் அந்த விண்ணப்பங்கள் வருகிற ஜனவரி 4-ந் தேதி வெளியிடப்படவுள்ள புதிய வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வதற்கு பரிசீலிக்கப்படாது. #VoterList #TN

    Next Story
    ×