search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் - வாலிபர் கைது
    X

    கே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் - வாலிபர் கைது

    கே.வி.குப்பம் அருகே தோ‌ஷம் நிவர்த்தி செய்வதாக நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி பத்மாவதி (வயது 49). நேற்று காலையில் பத்மாவதி வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் உங்கள் வீட்டில் தோ‌ஷம் உள்ளது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து அவரிடம் தங்க நகைகளை வைத்துதான் தோ‌ஷம் கழிக்க வேண்டும் என கூறி பத்மாவதியிடம் இருந்து ½ பவுன் நகையை வாங்கி உள்ளார்.

    பின்னர் நகையை புளியில் வைத்து தோ‌ஷம் கழிப்பது போல் செய்துவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து பத்மாவதி புளியில் பார்த்தபோது நகை இல்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பத்மாவதி உடனடியாக உறவினர்கள் துணையுடன் அந்த வாலிபரை தேடினர்.

    அப்போது வடுகந்தாங்கல் பகுதியில் நின்றிருந்த அந்த வாலிபரை மடக்கி பிடித்து கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் வாலாஜா பகுதியை சேர்ந்த செல்வம் (21) என்பது தெரியவந்தது.

    இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகைசெல்வன் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து ½ பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×