search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல், டீசல் விலை 19-வது நாளாக வீழ்ச்சி
    X

    பெட்ரோல், டீசல் விலை 19-வது நாளாக வீழ்ச்சி

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன. இன்று 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. #FuelPrice
    சென்னை:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தபடி இருப்பதால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலைகளும் குறைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று (திங்கட்கிழமை) 19-வது நாளாக பெட்ரோல்- டீசல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 23 காசுகள் குறைத்து எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் காரணமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.61க்கு விற்கப்படுகிறது.

    டீசல் விலையில் லிட்டருக்கு 21 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் டீசல் சென்னையில் ரூ.77.34 ஆக உள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல்-டீசல் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

    டெல்லியில் சென்னையை விட பெட்ரோல்-டீசல் விலைகள் சுமார் ரூ.2 வரை குறைவாக உள்ளது. கடந்த 19 நாட்களில் தொடர்ச்சியாக விலை குறைந்ததால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.50 வரை குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. #FuelPrice
    Next Story
    ×