search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் சாலை தெருவில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி
    X

    ராமநாதபுரம் சாலை தெருவில் விதிமீறும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி

    ராமநாதபுரத்தில் சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டுனர்களால் போக்குவரத்து நெரிசலும், விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் நகர் பகுதியில் சூப்பர் மார்க்கெட், மீன் மார்க்கெட், ஜவுளிக்கடை, பழக்கடைகள், மளிகைக்கடைகள் என முக்கிய பஜார் பகுதியாக சாலைதெரு விளங்குகிறது.

    இந்தப்பகுதியில் எப்போதும் வாகனங்களும், மக்கள் கூட்டமும் இருந்து வருகிறது. இதையொட்டி சாலை தெருவில் இருந்து சென்ட்ரல் கிளாக் பகுதிக்கு செல்லும் வழியை ஒரு வழிப்பாதையாக்கி, அக்ரஹாரம் ரோடு வழியாக அரண்மனை மற்றும் பஜார் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இது பொதுமக்கள், வியாபாரிகள் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக இருந்தது. இந்த சிக்னலில் இருந்து சென்ட்ரல் கிளாக் பகுதிக்கு நேரே செல்லக் கூடாது என்று தெரிவிக்க ஒரு வழிப்பாதை என்ற அறிவிப்பு போர்டு வைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை நேரங்களில் போலீசார் நின்று ஒரு வழிப்பாதையில் போக்குவரத்தை கண்காணிக்கின்றனர்.

    போலீசார் இல்லாத நேரத்தில் பஜாருக்கு எளிதாக செல்ல, சில வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல், ஒரு வழிப்பாதைக்குள் புகுந்து செல்கின்றனர்.

    அப்போது எதிரே வரும் வாகனங்களில் மோதி விபத்து ஏற்படுகிறது. இதனால் ஒரு வழிப்பாதையில் நடந்து செல்வோருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.

    திடீரென வாகனங்கள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஆங்காங்கே வாகனங்கள் நின்று விடுகின்றன. பின்னர் போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    போலீசார் இல்லாத போது பெரும்பாலான வாகனங்கள் ஒரு வழிப்பாதையில் தான் செல்கின்றன. வாகன ஓட்டுநர்கள் சாலை விதிகளை மதித்து ஒரு வழிப்பாதையில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

    தற்போது பண்டிகை காலம் என்பதால் தினந்தோறும் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. பலர் ஒருவழிப்பாதையில் நடந்து செல்கின்றனர்.

    இதை பொருட்படுத்தாமல் வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து விதியை மீறி ஒருவழி பாதையை பயன்படுத்துகின்றனர். இதை தடுக்க மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×