search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனியில் கனமழை - வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    தேனியில் கனமழை - வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    தேனி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #VaigaiDam
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

    வருசநாடு, கண்டமனூர், வெள்ளிமலை உள்ளிட்ட வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 2281கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையில் 69 அடி நீர்மட்டம் உள்ளதால் அணைக்கு வரும் 2281 கனஅடிநீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.40 அடியாக உள்ளது. 979 கனஅடிநீர் வருகிறது. 1960 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உள்ளது. 20 கனஅடிநீர் வருகிறது. 100கனஅடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.29 அடியாக உள்ளது. 133 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானலில் நேற்று இரவு சாரலாக தொடங்கி விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய நீரூற்றுகள் உருவாகியுள்ளன.

    சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. மேலும் பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்ப்பதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பெரியாறு 7.6, தேக்கடி 14.8, கூடலூர் 5.1, சண்முகாநதி அணை 3, உத்தமபாளையம் 3.7, வீரபாண்டி 3, வைகை அணை 0.6, மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. #VaigaiDam

    Next Story
    ×