search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி பெல் குடியிருப்பு பூங்காவில் 20 மான்கள் உயிரிழப்பு
    X

    திருச்சி பெல் குடியிருப்பு பூங்காவில் 20 மான்கள் உயிரிழப்பு

    திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் 20 மான்கள் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவெறும்பூர்:

    திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு வளாகத்தில் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடுவதற்கான உபகரணங்கள் உள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்ட மான்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக இங்கு வளர்க்கப்பட்டு வரும் மான்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென இறந்து வந்தன. இதுவரை 20 மான்கள் வரை இறந்துள்ளன. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை.

    பருவநிலை மாற்றத்தால் மான்கள் இறந்ததா? அல்லது வி‌ஷ பூச்சிகள் கடித்ததால் இறந்ததா? என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வி‌ஷச்செடிகளை சாப்பிட்டதால் இறந்ததா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் மான்களின் உடலில் அளவுக்கு அதிகமான கொழுப்புகள் சேர்ந்ததால் அவை மூச்சி விட முடியாமல் இறந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மான்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதன்பிறகு சாவுக்கான காரணம் குறித்து முழு விவரம் தெரியவரும். #tamilnews
    Next Story
    ×