search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை

    வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. #northeastmonsoon #heavyrain

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியது.

    எனினும் அதிகாலை வேளையில் கடும் பனிப்பொழிவும் உண்டானது. இந்த நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதால் தமிழகம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை, தூத்துக்குடி மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நேற்று இரவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. குறிப்பாக மணி முத்தாறு, பாபநாசம், குற்றாலம் மலைப்பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது.

    மணிமுத்தாறு அணைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்தது. இந்த பகுதியில் அதிகபட்சமாக 286 மில்லிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து இன்று 89.40 அடியாக உள்ளது. பாபநாசம் மலைப்பகுதியிலும் வழக்கத்தை விட அதிக மழை பெய்தது. இங்கு 160 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கனமழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து இன்று 105.60 அடியாக உள்ளது.

    குற்றாலம் மலைப்பகுதியிலும் கன மழை பெய்தது. குற்றால சீசனுக்கு பின்னர் சமீபத்தில் பெய்த மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுந்தது. பின்பு மழை நின்றதால் அருவில் தண்ணீர் குறைந்தது. இந்த நிலையில் நேற்று இரவில் இருந்து இப்பகுதியில் கன மழை பெய்ய தொடங்கியது.

    இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவையும் தாண்டி தண்ணீர் கொட் டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட வில்லை. நெல்லையில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.

    விடிய விடிய மழை தூறிக்கொண்டே இருந்ததால் குளிர்ந்த கால நிலை நிலவியது. களக்காடு பகுதியில் கன மழை பெய்தது. இதனால் ஓடைகள், கால்வாய் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    மணிமுத்தாறு-286, பாபநாசம்-160, நம்பியாறு-125, சேரன்மகாதேவி-60, சேர்வலாறு-60, நாங்கு நேரி-57, கொடுமுடியாறு-50, ராதாபுரம்-40, செங் கோட்டை-40, சங்கரன் கோவில்-32, அம்பை-31, குண்டாறு-31, ராமநதி-30, கடனாநதி-27, தென்காசி-22, பாளையங்கோட்டை-11.2, ஆய்க்குடி-10.4, நெல்லை-9.6, சிவகிரி-9, கருப்பாநதி-8, அடவிநயினார்-7,

    தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று இரவு பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் ஒரே நாளில் 219 மில்லி மீட்டர் மழை பதிவானது. குலசேகரப் பட்டினத்தில் 195 மில்லி மீட்டர் மழையும், திருச்செந்தூரில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.


    தூத்துக்குடியில் மிதமான மழை பெய்தது. ஸ்ரீவை குண்டம், மணியாச்சி பகுதியில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. தொடர்ந்து இன்று காலையும் மழை பெய்து கொண்டே இருந்ததால் தூத்துக்குடியில் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    சாத்தான்குளம்-219, குலசேகரப்பட்டினம்-195, திருச்செந்தூர்-112, காயல்பட்டினம்-78.4, ஸ்ரீவைகுண்டம்-70, மணியாச்சி-70, ஓட்டப்பிடாரம்-45, கடம்பூர்-19, காடல்குடி-12, கழுகுமலை-10, தூத்துக்குடி-8.6, வைப்பாறு-7, கயத்தாறு-7, வேடநத்தம்-7, எட்டயபுரம்-3, கோவில்பட்டி-3

    பாபநாசம்-105.60 அடி

    சேர்வலாறு-112.01

    மணிமுத்தாறு-89.40

    கடனா-67.80

    ராமநதி-62.

    கருப்பாநதி-69.23

    குண்டாறு-36.10

    வடக்கு பச்சையாறு-21.50

    நம்பியாறு-22.53

    அடவிநயினார்-108.75 . #northeastmonsoon #heavyrain

    Next Story
    ×