search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்
    X
    கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்திருப்பதை படத்தில் காணலாம்

    ஈரோடு புறநகர் பகுதிகளில் கொட்டிய கன மழை- கோபி அருகே கோவிலுக்குள் புகுந்த மழை வெள்ளம்

    ஈரோடு மாவட்டத்தில் நேற்றும் 2-வது நாளாக பரவலாக பெய்த மழையில் கோபி அருகே கோவிலுக்குள் மழை வெள்ளம் புகுந்தது.
    ஈரோடு:

    ஈரோடு சுற்று வட்டார பகுதிகளான லக்காபுரம், 46 புதூர், ஆணைக்கல்பாளையம், முள்ளாம்பரப்பு, நொச்சி காட்டு வலசு ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 4.30 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை சுமார் 30 நிமிடம் பலமாக கொட்டி தீர்த்தது.

    இந்த கன மழையால் ரோட்டில் மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் லக்காபுரம் மற்றும் 46 புதூர் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.

    இதே போல் சிவகிரி, கொடுமுடி, அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் கோபி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையால் ஓடையில் கலந்து மழை தண்ணீர் 200 வீடுகளில் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் அங்குள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் மழை வெள்ளம் வடிந்து அந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பியது. பள்ளியில் தங்க வைக்கப்பட்ட மக்களும் அவரவர் வீடுகளுக்க சென்றனர்.

    இந்த நிலையில் கோபி பகுதியில் பெய்த மழையால் மழைத் தண்ணீர் கீரிப்பள்ளம் ஓடையில் கலந்து ஓடியது. கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலையும் இந்த வெள்ளம் சூழ்ந்தது. கோவிலுக்குள்ளேயும் தண்ணீர் புகுந்தது. இந்த கோவில் அருகே தடப்பள்ளி வாய்க்கால் உள்ளது. இந்த தண்ணீரும் சேர்ந்து கொண்டத்து காளியம்மன் கோவிலை சூழ்ந்தது. இந்த தண்ணீரை கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் வெளியேற்றினர். #tamilnews
    Next Story
    ×