search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்
    X

    பாஜக அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்

    மாநில சுயாட்சியைப் பறிக்கும் மத்திய பா.ஜ.க அரசை வீழ்த்த அனைத்து மாநிலக் கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #regionalparties #regionalpartiesunity #BJP #BJPoutofpower
    சென்னை:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்குவதில் ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு முனைப்பு காட்டி வருகிறார்.

    இதற்காக, வட மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் தலைவர்களை அவர் தொடர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்த பாஜக எதிர்ப்பு அணிக்கான நோக்கம் என்ன? என்பது தொடர்பாக விளக்கம் அளித்த சந்திரபாபு நாயுடு ‘தேசத்தைப் பாதுகாக்க இது ஜனநாயக நிர்பந்தம்’ என்று தெரிவித்திருந்தார்.

    இந்த கருத்துக்கு இன்று வரவேற்பு தெரிவித்துள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சொன்னதை நான் வழிமொழிகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், ஊழல், எத்தேச்சாதிகார, பிரிவினைவாத சக்திகள் நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை அழித்து வருவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், பா.ஜ.க. அல்லாத அனைத்து கட்சிகளும் ஒரே பொதுத்தளத்தில் இணைய வேண்டியது தற்போதைய காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.

    இதற்கான முன்முயற்சிகளில் ஈடுபட்டுவரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துள்ள ஸ்டாலின், இவர்களை நான் ஆதரிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். #MKStalin #regionalparties #regionalpartiesunity #BJP #BJPoutofpower
    Next Story
    ×