search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை
    X

    ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய உரிமம் இல்லாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை

    முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை என ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார். #ChennaiHighCourt #OnlineDrugs
    சென்னை:

    ஆன்-லைன் மூலம் மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மருந்தாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய நேற்று முன்தினம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்த நிலையில், நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அப்போது வக்கீல் எஸ்.வர்ஷா ஆஜராகி, ‘ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்ய என் கட்சிக்காரர் நிறுவனம் முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்றுள்ளது. இந்த ஐகோர்ட்டு ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளதால், நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    அதற்கு பதில் அளித்த நீதிபதி, ‘முறையான உரிமம் மற்றும் அனுமதியை பெற்ற நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய தடை இல்லை. சட்டவிரோதமாக, உரிமம் எதுவும் பெறாத நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

    அதேபோல, ஐகோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்கக்கோரி ஆன்-லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் சில மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் அனைத்தையும் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
    Next Story
    ×