search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெருந்துறை பகுதிகளில் கனமழை-குளங்கள் நிரம்பியது
    X

    பெருந்துறை பகுதிகளில் கனமழை-குளங்கள் நிரம்பியது

    பெருந்துறை பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.

    ஈரோடு:

    வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) முதல் பரவலாக பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெருந்துறை, கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரம் மணி தொடர்ந்து கொட்டியது.

    இதனால் கோபியில் 200 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதே போன்று மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறையில் 90.2 மி.மீட்டர் மழை கொட்டியது. பெருந்துறையில் நேற்று இரவு 1 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து 3.30 மணி நேரம் கொட்டியது. இடி-மின்னல் இல்லாமல் வெறும் மழையாக கொட்டியது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. மேலும் பெருந்துறை அடுத்த சரளை, வேட்டுவபாளையம், மரத்துபாளையம், விஜய மங்கலம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் குளிமையாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்த கனமழையால் பெருந்துறை பகுதியில் உள்ள சித்தன்பட்டிகுளம், வெங்கமேடு குளம், விஜயமங்கலம் பகுதியில் உள்ள 2 குளங்கள் ஆகியவை நிரம்பியது.

    இதே போன்று அணை பகுதியான பவானிசாகர், குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், கொடிவேரி போன்று பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை மி.மீட்டரில் வருமாறு.-

    பொருந்துறை -90.2

    சத்தியமங்கலம் -17.2

    வரட்டுபள்ளம் -2.3

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நிலகிரி மலை பகுதியில் நேற்று மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீரின் வரத்து இன்று அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 1250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.24 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2572 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,300 கனஅடியும் என மொத்தம் 2,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×