search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் நகை- பணத்துக்காக தம்பதி கொலை: ஆந்திர கல்குவாரியில் பதுங்கிய 2 கொலையாளிகள் கைது
    X

    திருப்பூரில் நகை- பணத்துக்காக தம்பதி கொலை: ஆந்திர கல்குவாரியில் பதுங்கிய 2 கொலையாளிகள் கைது

    திருப்பூரில் தம்பதியை கொலை செய்து விட்டு ஆந்திர கல்குவாரியில் பதுங்கி இருந்த 2 கொலையாளிகளை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி பாளையம் நாச்சிபாளையம் நத்தக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 70). விவசாயி. இவரது மனைவி தெய்வாத்தாள் (65). தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர்.

    முத்துசாமியும் அவரது மனைவி தெய்வாத்தாளும் 28.12.2 017 - அன்று அவர்களது வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து அவினாசி பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த நகை- பணத்திற்காக கொலை நடந்திருப்பது தெரியவந்தது. நீண்ட நாட்கள் ஆகியும் கொலையாளிகள் குறித்து துப்புக்கிடைக்கவில்லை.

    இதனையடுத்து கொலையாளிகளை கண்டு பிடித்து கைது செய்ய திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டார். இதனையடுத்து 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலையாளிகள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுயம்புலிங்கம், சித்திரைராஜா ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை பிடிக்க போலீசார் தூத்துக்குடிக்கு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு இல்லை. அங்குள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில் சுயம்புலிங்கம், சித்திரைராஜா ஆகியோர் ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு கல்குவாரியில் வேலை செய்வது தெரியவந்தது.

    இதனையடுத்து குண்டூர் சென்ற போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    விசாரணையில் சித்திரை ராஜா கொலையான முத்துசாமி, தெய்வாத்தாள் ஆகியோரது வீட்டருகே தங்கியிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் நகை மற்றும் பணப்புழக்கம் அதிகம் இருந்ததை தெரிந்து கொண்டார்.

    தனியே வசிக்கும் வயதான தம்பதியை கொன்று நகை- பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தார்.

    அதன்படி தூத்துக்குடியில் உள்ள அவரது கூட்டாளி சுயம்பு லிங்கத்துக்கு இது குறித்து தெரிவித்து அவரை அவினாசிபாளையம் வரவழைத்தார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டுக்குள் நுழைந்த அவர்கள் முத்துசாமி மற்றும் தெய்வாத்தாளை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்து விட்டு 6 பவுன் நகை, அரை பவுன் மோதிரம் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் எதுவும் தெரியாமல் ஆந்திராவில் உள்ள கல்குவாரியில் வேலைக்கு சேர்ந்தது தெரியவந்தது.

    கைதான சுயம்புலிங்கத்திற்கு தூத்துக்குடியில் 2 கொலை வழக்கும், காஞ்சிபுரத்தில் 2 கொலை வழக்கும் உள்ளது தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை- பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையாளிகளை கண்டு பிடித்த தனிப்படை போலீசரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினர்.

    Next Story
    ×