search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டேரிக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயம்
    X

    காட்டேரிக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயம்

    காட்டேரிக்குப்பத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து அவரது தாய் போலீசில் புகார் கூறி உள்ளார்.

    திருக்கனூர்:

    கடலூர் செம்மண்டலம் பகுதியை சேர்ந்தவர் தேவ இரக்கம். ஓய்வு பெற்ற போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர். இவரது மகள் கிரேசி ஜெசிந்தா. (வயது 24).

    இவர் காட்டேரிக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கல்லூரியில் இருந்து காட்டேரிக்குப்பத்துக்கு வந்து செல்ல சிரமம் இருந்ததால் கிரேசி ஜெசிந்தா காட்டேரி குப்பத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    கடந்த சில நாட்களாக கிரேசி ஜெசிந்தா தனது தாய் லலிதாவுக்கு போன் செய்யவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லலிதா காட்டேரி குப்பத்தில் கிரேசி ஜெசிந்தா பணி புரிந்த பள்ளிக்கு சென்று விசாரித்தார்.

    அப்போது கடந்த சில நாட்களாக கிரேசி ஜெசிந்தா பள்ளிக்கு வரவில்லை என்று பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விடுதிக்கு சென்று பார்த்த போது அங்கும் கிரேசி ஜெசிந்தா இல்லை.

    இதையடுத்து லலிதா தனது மகள் மாயமானது குறித்து காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் கிரேசி ஜெசிந்தாவுக்கு கல்லூரியில் படிக்கும் போது அவருடன் படித்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரேசி ஜெசிந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை காதலன் சென்னைக்கு அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×