search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர மறுத்த பொன். ராதாகிருஷ்ணன்
    X

    மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர மறுத்த பொன். ராதாகிருஷ்ணன்

    வேதாரண்யம் அருகே மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் அமர மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். #BJP #PonRadhakrishnan
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் இன்று மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.

    இதையடுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்ட மத்திய மந்திரி மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார்.

    அப்போது அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டார்.

    பிறகு அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற் பட்டது.

    இதையடுத்து பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று மக்களை திரட்டி வர நடவடிக்கை எடுத்தனர். ஆனால் பெரும்பாலான அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் வேலைக்கு சென்று இருப்பதால் கிராமம் வெறிச்சோடி இருந்தது. இதனால் அரசு அதிகாரிகள் வேன், கார்களில் சென்று கிராம மக்கள் திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    காலை 11 மணிக்கு சுகாதார மையம் திறப்பு விழாவுக்கு வந்த மத்திய மந்திரி தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக மேடை ஏறாமல் பார்வையாளர்கள் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் அதிகாரிகள், சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்தனர். இதையடுத்து சமரசமான மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதியம் 1 மணிக்கு மேடையில் ஏறி பேசினார். #BJP #PonRadhakrishnan
    Next Story
    ×