search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர்களை தாக்கிய மினி பஸ் டிரைவர்- கண்டக்டர் கைது
    X

    நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர்களை தாக்கிய மினி பஸ் டிரைவர்- கண்டக்டர் கைது

    நாகர்கோவிலில் பிளஸ்-2 மாணவர்களை தாக்கிய மினி பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளில் நாகர்கோவில் புறநகர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் மினி பஸ்களில் வீடுகளுக்கு செல்வது வழக்கம். இதுபோல நேற்று மாலையிலும் ஏராளமான மாணவ- மாணவிகள் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஊருக்கு புறப்பட்டனர்.

    இதில் சுசீந்திரம் மற்றும் கோட்டார் பகுதியை சேர்ந்த பிளஸ்- 2  மாணவர்கள் 2 பேர் ஒரு மினி பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர். பஸ் கோட்டார் அருகே சென்றபோது, மாணவர்களுக்கும், மினி பஸ் கண்டக்டருக்குடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மினி பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகியோர் சேர்ந்து மாணவர்களை சரமாரியாக தாக்கினர்.

    டிரைவர் - கண்டக்டர் தாக்கியதில் 2 மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் சேர்ந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவர்கள் கோட்டார் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆன்றனி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    பின்னர் மினி பஸ் டிரைவர், கண்டக்டர் அபினேஷ், கவுதம்  மற்றும் ஜெனிஸ்டன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×