search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
    X

    கிருஷ்ணகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

    கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி போக்கு வரத்து தொழிலாளர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்து கழக நகர பணிமனை எதிரில் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் சேகர் தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு. மண்டல தலைவர் முரளி சிறப்புரையாற்றினார். இதில் தர்மபுரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்.

    இந்த போராட்டத்தின் போது, வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊழியர்களின் ஊதிய வஞ்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும். 1.4.2003-க்கு பின் பணியில் சேர்ந்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும். நிர்வாகங்கள் கையாடல் செய்த தொழிலாளர் பணம் ரூ. 7 ஆயிரம் கோடியை திரும்ப வழங்கிட வேண்டும். வேலை நிறுத்தம் காரணம் காட்டி பணி நிரந்தரம், பதவி உயர்வு வழங்க மறுக்கக் கூடாது. கண்டக்டர் பதவியை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    இதில் போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், பார்த்தீபன், சங்கர், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×