search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகை அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம்
    X

    வைகை அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றம்

    முழு கொள்ளளவை எட்டியதால் வைகை அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இதனால் விவசாய பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.
    கூடலூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.

    தேனி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பெய்த கன மழையினால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. வைகை அணையின் நீர்மட்டம் கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் சண்முகாநதி அணை, மஞ்சளாறு, சோத்துப்பாறை உள்ளிட்ட பல்வேறு அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாய பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

    பெரியாறு அணையின் நீர்மட்டம் 134.75, வரத்து 3336 கன அடி, திறப்பு 2 ஆயிரம் கன அடி. இருப்பு 5808 மி.கன அடி. வைகை அணை நீர்மட்டம் 69 அடி. அணைக்கு வரும் 3910 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. இருப்பு 5571 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.60 அடி. வரத்து 70 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.50 அடி. வரத்து 112 கன அடி. திறப்பு 30 கனஅடி. இருப்பு 100.44 மி.கன அடி.

    பெரியாறு 3.2, தேக்கடி 13.6, கூடலூர் 3.5, சண்முகாநதி அணை 5, உத்தமபாளையம் 27.6, வைகை அணை 1.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×