search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயசுதா
    X
    ஜெயசுதா

    தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல்- காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார்

    மயிலாடுதுறை அருகே தர்ணா போராட்டம் நடத்திய இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காதலன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த ஜெயசுதா(வயது26).ஐடிஐ டிப்ள மோ படித்துள்ளார். சென்னையில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே செம்பதனிருப்பு ராமர்கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும் சென்னையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் ஜெயசுதாவுக்கும், கார்த்திக்குக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2012-ம் ஆண்டு முதலே இருவரும் காதலித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 10-ந் தேதி கடலூரில் காதலர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கீழையூரில் தனியாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் 10 நாட்களுக்கு முன்பு உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. நான் சென்று வருகிறேன் என்று கூறிச்சென்ற கார்த்திக் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் ஜெயசுதா அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து கடந்த 18-ந் தேதி கணவரை தேடி ஜெயசுதா செம்பதனிருப்பு கிராமத்திற்கு சென்றார். அங்கு கணவர் வீட்டுக்கு சென்று விவரம் கேட்டார்.

    அப்போது இங்கு வரக்கூடாது என்று கார்த்திக்கின் தந்தை, தாயார் மற்றும் அவரது தம்பி ஆகியோர் ஜெயசுதாவை அடித்து தாக்கியதாத கூறப்படுகிறது.

    இதனால் ஆவேசம் அடைந்த ஜெயசுதா என் கணவர் வரும் வரை வீட்டை விட்டு போக மாட்டேன் என தர்ணா போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஜெயசுதாவின் திடீர் போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக் குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றனர். இதையடுத்து ஜெயசுதா எங்கும் செல்லாமல் வீட்டின் முன்பு தொடர்ந்து தர்ணா இருந்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவரின் குடும்பத்தினர் நேற்று ஜெயசுதாவை அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஜெயசுதாவை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த சம்பவம் பற்றி பாக சாலை போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நானும் கார்த்திக்கும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டோம். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கார்த்திக் பெற்றோர் எங்களை வாழ விடாமல் தடுத்து வருகின்றனர்.

    காதல் திருமணம் செய்த நாங்கள் கடந்த 3 மாதமாக மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம். தற்போது மாமாவை பார்க்க போகிறேன் என்று சென்ற என் கணவரை காணவில்லை. அவரை கண்டு பிடித்தும் என்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×