search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்
    X

    தஞ்சையில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல்

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 3 அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 4 பேர் டெங்குக்கு பலியாகி உள்ளனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகள், மற்றும் டெங்குவை கண்டுபிடிக்கும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக ஒரு மருத்துவர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டில் 20 பெண்களும், 8 ஆண்களும், 12 குழந்தைகளும் மொத்தம் 40 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பெற்று வருகின்றனர்.

    இதில் தஞ்சையை சேர்ந்த கல்லூரி மாணவர் அல்ரோஸ் (வயது 18), கும்பகோணத்தை சேர்ந்த கூலி தொழிலாளி தாமஸ் (40) மற்றும் மன்னார்குடியைச் சேர்ந்த ராஜா (30) ஆகிய 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    தஞ்சையில் டெங்குவால் 3 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதார பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
    Next Story
    ×