search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரியில் துப்பாக்கி முனையில் 2 ரவுடிகள் கைது
    X

    புழல் ஏரியில் துப்பாக்கி முனையில் 2 ரவுடிகள் கைது

    புழல் ஏரியில் துப்பாக்கி முனையில் 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    செங்குன்றம்:

    செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர்கள் சேது என்கிற சேதுபதி (27). ராஜேஷ் என்கிற கபாலி ராஜேஷ் (24).

    சேதுபதி மீது 4 கொலை வழக்கு, 8 கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 வழக்குகள் உள்ளன. கபாலி ராஜேஷ் மீது கொலை முயற்சி, வழிப்பறி உள்பட 12 வழக்குகள் உள்ளன.

    இந்த பகுதியில் ரவுடித் தனம் செய்த 2 பேரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். 3 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் 2 பேரும் ரவுடி தனத்தில் ஈடுபட்டனர். இதை தட்டிக் கேட்ட ஆயுதப்படை போலீஸ் மற்றும் ஏட்டு பாலாஜி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதையடுத்து ரவுடிகள் 2 பேரையும் கைது செய்யும்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவிட்டார். இந்த நிலையில், பாடியநல்லூர் தி.மு.க. பிரமுகர் ஒருவரை ரவுடிகள் 2 பேரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, போலீஸ் துணை கமி‌ஷனர் கலைசெல்வன், உதவி கமி‌ஷனர் வெங்கடேசன் ஆகியோர் மேற்பார்வையில் புழல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் 2 ரவுடிகளையும் தேடி வந்தனர். நேற்று முன்தினம் செங்குன்றம் ஆலமரம் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அபோது, ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த ரவுடிகள் சேதுபதி, கபாலி ராஜேஷ் ஆகியோரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.

    போலீசாரிடம் இருந்து தப்புவதற்காக 2 பேரும் புழல் ஏரிக்குள் ஓடினார்கள். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 பட்டாக் கத்திகள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ரவுடிகள் சேதுபதி, கபாலி ராஜேஷ் இருவரும் பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×