search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது: தமிழிசை சவுந்தரராஜன்

    ‘இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு யாரும் அரசியல் நடத்த முடியாது’ என பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #TamilisaiSoundararajan #BJP
    நெல்லை :

    பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லை வந்தார். அவர் நெல்லை சந்திப்பு குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து குறுக்குத்துறை படித்துறை தாமிரபரணி ஆற்றில் இறங்கி புனித நீராடி வழிபாடு நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    144 ஆண்டுகளுக்கு பிறகு மகா புஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. உள்ளூர் மட்டும் அல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வருகிறார்கள்.

    விழாவுக்கு போலீசார் சிறந்த முறையில் பாதுகாப்பு கொடுத்துள்ளனர். அதேபோல் அரசும் படித்துறை பகுதியில் தேவையான பணிகளை செய்துள்ளது.



    மகா புஷ்கர விழாவில் சுவாமி நெல்லையப்பர் தீர்த்தவாரி நடைபெறாதது ஒன்று தான் குறைவாக இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில் உள்ள தைப்பூச மண்டபத்தில் நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் எழுந்தருள வேண்டும். அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீர்த்தவாரி நடத்த வேண்டும். விழா முடிவடையும் நேரத்திலாவது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்த்தவாரியை நடத்த வேண்டும்.

    இந்து மதத்தை புறம் தள்ளிவிட்டு, எந்த கட்சியும் அரசியல் செய்ய முடியாது. இதற்கு சபரிமலை புரட்சியும், தாமிரபரணி எழுச்சியும் எடுத்துக்காட்டு ஆகும்.

    பாரதீய ஜனதா கட்சி தேர்தல் பணிகளை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கி விட்டது. தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துள்ளோம். அவர்கள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து விட்டன. நாங்கள் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP 
    Next Story
    ×