search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் கொள்முதல் மையம் அமைக்கப்படுமா?
    X

    நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் கொள்முதல் மையம் அமைக்கப்படுமா?

    நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் கொள்முதல் மையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    குன்னூர்:

    மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயமே பிரதானமாக இருக்கிறது. இது தவிர கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் தேயிலை விலை வீழ்ச்சி அடைந்ததால், மலைக்காய்கறிகளை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர். குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட பாலாடா, சோலாணி மட்டம், கொல்லிமலை போன்ற பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் பீட்ரூட் பயிரிடப்பட்டு உள்ளது. ஒரு ஏக்கரில் 20 டன் பீட்ரூட்களை விவசாயிகள் அறுவடை செய்கிறார்கள். பயிரிட்ட 2 மாதங்களில் பீட்ரூட் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை செய்யப்படும் பீட்ரூட்கள் மூட்டைகளாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் இருந்து மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு பீட்ரூட் மூட்டைகளை லாரிகளில் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். இதனால் லாரி வாடகை, பாரம் சுமக்கும் தொழிலாளிக்கு கூலி என விவசாயிகளுக்கு தனி செலவு. ஆனால் கடந்த வாரத்தில் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் ஒரு கிலோ பீட்ரூட்டுக்கு ரூ.6 முதல் ரூ.15 வரை தான் கொள்முதல் விலை கிடைத்தது. இருப்பினும் நேற்று ஒரு கிலோ பீட்ரூட் ரூ.25 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் இந்த விலையும் விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத நிலை தான் உள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் பரவலாக பீட்ரூட் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமவெளி பகுதிகளில் இருந்தும் பீட்ரூட் சாகுபடி செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு கொண்ட வரப்படுகிறது. இதன் காரணமாக பீட்ரூட் விலை வீழ்ச்சி அடைகிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பீட்ரூட் பயிரிட்டு, அதனை அறுவடை செய்து மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் வரை செலவு அதிகரிக்கிறது. ஆனால் வரவு திருப்தியாக இல்லை. மார்க்கெட்டில் உள்ள மண்டிகளில் இடைத்தரகர்கள் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் பீட்ரூட்டுக்கு கிடைக்கும் விலை கட்டுப்படியாவதில்லை. எனவே நீலகிரி மாவட்டத்தில் பீட்ரூட் கொள்முதல் மையம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×