search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தலுக்கு தயாராகும் திமுக - அக்டோபர் 25-ம் தேதி முக்கிய ஆலோசனைக்கூட்டம்
    X

    தேர்தலுக்கு தயாராகும் திமுக - அக்டோபர் 25-ம் தேதி முக்கிய ஆலோசனைக்கூட்டம்

    திமுக நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 25-ம் தேதி ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. #DMK
    சென்னை:

    2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கட்சிகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று திமுக கட்சியின் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    இந்நிலையில், வருகிற அக்டோபர் 25-ம் தேதி முக்கிய ஆலோசனைக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெறுவதற்காக திமுக தீவிரமாக செயலாற்றி வருகிறது.

    அதன்படி, அக்டோபர் 25-ம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #DMK
    Next Story
    ×