search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணி நிறைவு
    X

    வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணி நிறைவு

    வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. #VandaloorPark #ButterflyPark
    வண்டலூர்:

    வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா 2.7 ஹெக்டேர் பரப்பளவில் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பூங்காவில் 200 வகையான தாவரங்கள் நடப்பட்டு 40 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை புரிந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது, குறிப்பிட்ட பருவகாலங்களில் மட்டுமே இவை வருகை தரும். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வார்தா புயலால் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் இல்லம் வெகுவாக பாதிக்கப்பட்டு முற்றிலும் சேதம் அடைந்த நிலையில், வெவ்வேறு காலகட்டங்களில் படிப்படியாக வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

    தற்போது வண்ணத்துப்பூச்சி பூங்கா சீரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் பூங்காவிற்குள் புதிதாக செடிகள் நடப்பட்டு உள்-அரங்கமும் சீரமைக்கப்பட்டுள்ளது. வண்ணத்துப்பூச்சிகள் மீண்டும் வர தொடங்கியுள்ளதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வண்டலூர் பூங்காவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×