search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா, கள்ளக்காதலன் சரத்குமார்
    X
    கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யா, கள்ளக்காதலன் சரத்குமார்

    கள்ளக்காதலுக்கு இடையூறு கள்ள காதலியின் கணவரை கழுத்தை அறுத்த மில் தொழிலாளி

    கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலியின் கணவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ராஜதானிக் கோட்டையைச் சேர்ந்தவர் வடிவரசு (வயது 36). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 4 வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டில் தங்கி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பர்த்து வருகிறார். வடிவரசு தனது 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    ஐஸ்வர்யா வேலை பார்த்த மில்லில் சின்னாளப்பட்டி அடுத்துள்ள கோட்டைப் பட்டியைச் சேர்ந்த சரத்குமார் (25) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர்கள் 2 பேரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இவர்கள் இருவரும் பல இடங்களில் மோட்டார் சைக்கிளில் ஒன்றாக சுற்றி வந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வடிவரசிடம் கூறினர். தனது மனைவி வேறு ஒரு வாலிபருடன் சுற்றி வருவதை அறிந்த அவர் ஆத்திரமடைந்தார்.

    மனைவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோர்களிடம் சத்தம் போட்டு அவரை ஒழுக்கமாக இருக்குமாறு கண்டித்து சென்றார். தொடர்ந்து சரத்குமாரும், ஐஸ்வர்யாவும் நெருக்கமாக பழகி வந்த விபரம் தெரிய வரவே அடிக்கடி ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசி சத்தம் போட்டார்.



    இதனால் ஐஸ்வர்யா தனது கணவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக சரத்குமாரிடம் ஆசையாக பேசி நாம் இதே போல் சந்தோசமாக வாழ வேண்டும் என்றால் அவரை தீர்த்து கட்ட வேண்டும் என கூறினார். அதன்படி சரத்குமாரும் வடிவரசை கொலை செய்ய ஒத்துக் கொண்டார்.

    அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தான் ஒரு வீடு கட்டப் போவதாகவும் அதனை எந்தஅமைப்பில் கட்ட வேண்டும் என பார்த்து சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி சாதிக் கவுண்டன் பட்டியில் உள்ள ஒரு இடத்துக்கு வடிவரசை சரத்குமார் அழைத்துச் சென்றார்.

    பேசி முடித்து விட்டு சடையாண்டிபுரம், பகுதிக்கு வரவழைத்து 2 பேரும் மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வடிவரசின் கழுத்தை அறுத்தார். உடனே அவர் சத்தம் போடவே சரத்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய வடிவரசை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய முயன்ற சரத்குமாரையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஐஸ்வர்யாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
    Next Story
    ×