search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடர் விடுமுறை - ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு
    X

    தொடர் விடுமுறை - ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்கள் தொடர் விடுமுறை காரணமாக தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
    ஒகேனக்கல்:

    தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுகு ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது.

    இதனால் மக்கள் குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் படையெடுத்தனர். இன்று சனிக்கிழமை என்பதால் அளவுக்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மக்கள் வீட்டில் இறைச்சிகள் எடுத்து சமையல் செய்து குடும்பத்துடன் ஒகேனக்கல்லுக்கு சென்று குளித்து விட்டு உணவுகளை சாப்பிட்டனர்.

    மேலும் ஒகேனக்கல்லில் ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் மீன்கள் வாங்கி கொண்டு விறகு அடுப்பில் சமையல் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். அளவுக்கு அதிகமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் கார், டெம்போ, பஸ், பைக் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு திக்குமுக்காடினர்.

    கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து இருந்தனர். இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தனர்.

    கர்நாடகா மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பியது. அதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தமிழகத்தை வந்தடைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது.

    ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக வந்தது. இதனால் மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டது. ஒகேனக்கல் மெயின் அருவி நடைபாதைக்கு மேல் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நேற்று காலை வினாடிக்கு 21,700 கனஅடியாக குறைந்து வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று மதியம் தடை நீக்கப்பட்டது. இன்று நீர்வரத்து வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக மெயின்அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனர்.

    பரிசல் சவாரி சென்று தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொங்குபாலத்தில் சென்று ஒகேனக்கல் காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர்.

    Next Story
    ×