search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பஸ்சில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டர்
    X

    தனியார் பஸ்சில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டர்

    கோவை சூலூர் அருகே தனியார் பேருந்தில் பயணம் செய்த கிராம நிர்வாக அதிகாரியிடம் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்த கண்டக்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் லோகநாயகி.

    சம்பவத்தன்று இவர் அலுவலக பணி காரணமாக பாப்பம்பட்டி பிரிவில் இருந்து கோவைக்கு செல்வதற்காக தாராபுரத்தில் இருந்து கோவைக்கு வந்த தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது லோகநாயகி தன்னிடம் இருந்த 10 ரூபாய் நாணயத்தை கண்டக்டரிடம் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளார்.

    நாணயத்தை கண்டக்டர் வாங்க மறுத்து பஸ்சில் இருந்து இறங்குமாறு தகராறு செய்துள்ளார். பஸ் சிங்காநல்லூர் அருகே வந்த போது டிக்கெட் பரிசோதகர் பஸ் சில் ஏறி உள்ளார். அவரும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து விட்டார்.

    இதனையடுத்து லோகநாயகி செல்போன் மூலம் சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சித்தாவை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினார். அவர் கண்டக்டரை எச்சரிதார். பின்னர் கண்டக்டர் 10 ரூபாய் நாணயத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுத்துள்ளார். இதனால் பஸ்சில் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews
    Next Story
    ×