search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே வைரஸ் காய்ச்சலால் 50 பேர் பாதிப்பு
    X

    ஆண்டிப்பட்டி அருகே வைரஸ் காய்ச்சலால் 50 பேர் பாதிப்பு

    ஆண்டிப்பட்டி அருகே 50 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ளது சித்தார்பட்டி கிராமம். இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் பருவ நிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ராஜதாணி அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காய்ச்சல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மூட்டு வலி, கண் எரிச்சல் உள்ளிட்ட வைகளால் அவதியடைந்து வருகின்றனர். எனவே காய்ச்சல் பரவாமல் இருக்க சித்தார்பட்டியில் மருத்துவ குழுவினர் முகாமிட்டுள்ளனர். அனைவருக்கும் ரத்த பரிசோதனை செய்து காய்ச்சல் மேலும் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குடிநீரை காய்ச்சி குடிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், சித்தார்பட்டிக்கு சப்ளை செய்யப்படும் குடிநீரில் சாக்கடை கலந்து வருகிறது. இதனை குடிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே அதிகாரிகள் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×