search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
    X

    அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

    மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி ராமசாமி தமிழ்க் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயமணி உள்பட பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் அப்துல்கலாமின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி முதல்வர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ் அலுவலர் ஜெயமணி செய்திருந்தார்.



    மானாமதுரை செயிண்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த விழாவில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் பள்ளி தாளாளர் கிறிஸ்து ராஜா, கலாமின் அறிவியல் கண்டுபிடிப்புகள், அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். முடிவில் பள்ளி துணை முதல்வர் சாலமன் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.

    இதேபோல திருப்பத்தூர் அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பள்ளி தாளாளர் ஹாஜி பாபா அமிர்பாதுஷா அப்துல் கலாமை பற்றிய அறிவு சார்ந்த கருத்துக்களை எடுத்து கூறினார். பள்ளி முதல்வர் கவிதாமேரி வரவேற்றார். இதில் அப்துல்கலாமை பற்றி பாடல்கள் பாடப்பட்டன. பெற்றோர் சங்கத்தின் சார்பில் ஹேமலதா வாழ்த்தி பேசினார். முடிவில் ஆசிரியை முத்துக்குமாரி நன்றி கூறினார்.

    கிறிஸ்துராஜா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளைஞர் எழுச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகி விக்டர் தலைமை தாங்கினார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம் நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ரூபன் வரவேற்றார். நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் ‘விஷன்2020‘ என்ற தலைப்பில் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நகர் வர்த்தக சங்கத் தலைவர் லட்சுமணன், பொருளாளர் சிவராஜ், கல்வியாளர் ரங்கசாமி, முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாணவர் தலைவர்கள் ஜெப்ரீ, முத்துமீனா ஆகியோர் செய்திருந்தனர்.

    ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை இளைஞர்கள் எழுச்சி நாளாகக் கொண்டாடும் வகையில் ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப் சார்பாக ரத்ததான முகாம் மற்றும் ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கல்லூரி செயலாளர் ராமேஸ்வரன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கியும், 1,800 மாணவ- மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமிலும் பங்கு கொண்டனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்த வங்கி மருத்துவர் அருள்தாஸ் மற்றும் நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா உள்பட 50-க்கும் மேற்பட்ட நர்சுகள் முகாமில் பணியாற்றினர். இதில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குனர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி, காளிதாஸ், நாராயணசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் முகாம் அமைப்பாளர் அய்யப்பன் நன்றி கூறினார். 
    Next Story
    ×