search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்
    X

    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து சென்னையில் பாஜக ஆர்ப்பாட்டம்

    பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை:

    தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறைகள் பற்றியும் இழிவாக பேசியதாக பஞ்சாப் மந்திரி சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘‘தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் உணவு முறை பற்றியும் பஞ்சாப் மந்திரி நவ்ஜோத் சிங் சித்து இழிவாக பேசியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் யாரும் இதை கண்டித்து அறிக்கைவிடவில்லை.

    சித்து கூட்டணி கட்சியான காங்கிரசை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் தமிழ் உணர்வு மிக்க, தமிழர்கள் மீது மதிப்பு வைத்துள்ள பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.

    தமிழர்களை இழிவாக பேசிய சித்து மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும். மேலும் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கையில் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனது. இதனால் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். எனவே தமிழர்கள் பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு அருகதை கிடையாது.

    அதே நேரத்தில் இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு பா.ஜனதா கட்சி பாடுபட்டு வருகிறது. தமிழ் இனத்தை காக்க தொடர்ந்து பாடுபடு வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் தனஞ்செயன், மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார், நிர்வாகி காளிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சபரிமலை விவகாரம் குறித்து தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப் பக்தர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்கவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு செவிசாய்க்க வேண்டியதுதான் அரசாங் கத்தின் கடமை.

    நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள். சட்டத்தை மீறமாட்டோம் என்று கூறும் கேரள முதல் மந்திரியும், அவர் சார்ந்த கட்சியினரும் சட்டத்துக்கு எதிராக போராடியது இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது தானே. அதை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க தானே செய்தார்கள். எத்தனை தொழிற்சாலைகளில் கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார் கள்.

    இப்போது சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம் என்று பிடி வாதமாக இருப்பது அவர் களது இந்து விரோத உணர்வை வெளிப்படுத்தி உள்ளது. பக்தர்களின் உணர்வுக்கு செவிசாய்க்கா விட்டால் அதற்குரிய பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×