search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுகவுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் குறிப்பிட்டார்- டிடிவி தினகரன்
    X

    அதிமுகவுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் குறிப்பிட்டார்- டிடிவி தினகரன்

    அ.தி.மு.க.வுக்கு பெண் தலைமை தாங்குவார் என்று சசிகலாவைத்தான் அமைச்சர் செல்லூர் ராஜூ குறிப்பிட்டார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.விற்கு விரைவில் பெண்மணி தலைமை தாங்கிடும் நிலை வரும் என்று செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார். ஏற்கனவே பொதுச்செயலாளராக பெண்மணிதான் தலைமையில் இருக்கிறார். செல்லூர் ராஜூ சூசகமாக சொல்வது, மற்றவர்களை விட அவருக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாக தெரிகிறது.

    மற்றவர்கள் எல்லாம் பொதுச்செயலாளரை பெயர் சொல்லி கூப்பிடும் அளவுக்கு தைரியம் உள்ளவர்கள் போன்று காண்பிக்கின்றார்கள்.

    அவரோ இன்று வரை சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கின்றார். மனதில் உள்ளதை சொல்லியுள்ளார். பெண்மணி தலைமையில் வரவேண்டும் என்று கூறி உள்ளார்.


    ஏற்கனவே அம்மாவின் காலத்தில் அ.தி.மு.க. ஒரு பெண்மணி தலைமையில்தான் இருந்தது. இப்போதும் கட்சியில் பொதுச்செயலாளராக இருப்பதும் பெண்மணி தலைமைதான். சசிகலா பொதுச்செயலாளராக உள்ளார். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

    முதல்- அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதுதான் 18 எம்.எல்.ஏ.க்கள் விருப்பம். அது தொடர்பாக ஒரு நெறியாளர் என்னிடம் கேட்டபோது அப்போது நான் சொன்னேன் அரசாங்கத்தின் மீது ஊழல் என்றால் தனிப்பட்டது. அமைச்சர்கள் 10, 12 பேர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியாகி உள்ளது.

    எனவே அவர்களை நீக்கி விட்டால் இவர்கள் ஆட்சி அமைக்க முடியும் என்று சொன்னேன். ஒருவேளை 33 பேரும் ஊழல்வாதிகள் என்றால் அதில் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் கொண்டு வருவார்கள். இல்லை என்றால் தேர்தல்தான் வரும் என்று சொன்னேன்.

    முதல்-அமைச்சர் மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

    இதில் கட்சிக்கு என்ன வேண்டி கிடக்கிறது. டி.வி.ஏ.சி. (கண்காணிப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்குநரகம்) தொடரும் என்று சொல்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் கிடையாது.

    டி.வி.ஏ.சி.யை தலைமை ஏற்றிருப்பவர் யார் என்றால் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான முருகன்தான். அவர் சொல்வதற்கு தயாராக இருக்கின்றாரா? என்று தெரியவில்லை. பொன்னையன் எப்படி சொல்ல முடியும். உடனே மறுநாள் மாற்றி பேசுகிறார்.


    ஜெயக்குமார் தினந்தோறும் பேட்டி தருவாரே? அவரை ஏன் காணவில்லை? என்ன காரணம்? அதைப் பற்றி ஏன் ஊடகத்தார் சொல்ல மாட்டீர்களே? பழனிசாமி விவகாரத்தில் வாயை திறக்காமல் ஏன் அமைதியாக இருக்கிறார்.

    டி.வி.ஏ.சி. சரியாக விசாரிக்கவில்லை என்பதால் தான் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். அதனால்தான் பொன்னையன் தவறுதலாக பேசி விட்டு இப்போது வாபஸ் பெறுகிறார்.

    சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளாகியுள்ள பழனிசாமி தார்மீகப் பொறுப்பேற்று முதல்-அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தி.மு.க. வலியுறுத்தியது.

    ஆனால் தார்மீகப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பதவி விலகும் பெருந்தன்மை, தைரியம் கிடையாது. அவர் அது போன்று நடந்து கொள்ள மாட்டார். ராஜினாமா செய்ய மாட்டார்.

    தானாக சி.பி.ஐ. விசாரணை செய்து அதில் வழக்குப்பதிவு செய்து வழக்கு நடைபெற்று கைது செய்யும் அளவுக்கு சென்றால்தான் அவர் முதல்-அமைச்சர் பதவியில் இருந்து இறங்குவார். அவரிடம் அதுபோன்ற பெருந்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

    எதிர்க்கட்சியை விட எங்களுக்கு பழனிசாமியை பற்றி நன்றாக தெரியும். நிச்சயம் பழனிசாமி முதல்- அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டார்.

    இவ்வாறு தினகரன் கூறினார். #TTVDhinakaran #Sasikala #SellurRaju
    Next Story
    ×