search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பதவியை ராஜினமா செய்துவிட்டு எடப்பாடி வழக்கை எதிர் கொள்ள வேண்டும்- முத்தரசன் பேச்சு
    X

    பதவியை ராஜினமா செய்துவிட்டு எடப்பாடி வழக்கை எதிர் கொள்ள வேண்டும்- முத்தரசன் பேச்சு

    ஜனநாயக முறையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று முத்தரசன் பேசினார். #mutharasan #karunanidhi #edappadipalanisamy

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக தலைமை இலக்கிய அணி சார்பில் கலைஞரின் நினைவலைகள் நிகழ்ச்சி மாநில இலக்கிய அணி தலைவர் முகவை தென்னன் தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் அமைச்சர் மதிவாணன், மாநில இலக்கிய அணி செயலாளர் முனைவர் இந்திராகுமாரி, துணை செயலாளர் கவிதை பித்தன், எம்.எல்.ஏ.க்கள் டி.ஆர்.பி.ராஜா, ஆடலரசன், முன்னாள் எம்பி விஜயன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

    திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசும்போது,

    தொண்டர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் கலைஞர் தான், மேலும் கலைஞருக்கு மெரினாவில் இடம் இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி தமிழ் நாட்டிலேயே இருக்க கூடாது என கூறினார்.


    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசும்போது கூறியதாவது:-

    கலைஞர் கூட்டத்தில் பேசும் போது அழைப்பிதழில் உள்ள அனைவரின் பெயரையும் கூறுவார், கூறிவிட்டு இறுதியாக எல்லாவற்றுக்கும் மேலாக எனது அன்பு உடன் பிறப்புகளே என்பார். இந்த அழைப்பிதழில் குடியரசு தலைவர் பெயர் இருந்தாலும் கூட அவருக்கும் மேலானவர்கள், தொண்டர்கள் கருதுபவர் கலைஞர்.


    இயற்கை கலைஞரிடம் மண்டியிட்டு பிச்சை கேட்டதால் கலைஞர் தனது உயிரை பிச்சை போட்டார். ஜனநாயக முறையில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #mutharasan #karunanidhi #edappadipalanisamy

    Next Story
    ×