search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்
    X

    சூலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்

    கோவை மாவட்டம் சூலூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் மதுக்கரை திருமலையாம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் செந்தில்குமார்(55). இவர் தமிழக போலீஸ் துறையில் 1988- ம் ஆண்டு பணியில் சேர்ந்து பல போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

    தற்போது சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று செந்தில் குமாரும், மற்றொரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தியும் சுல்தான் பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென செந்தில்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக செந்தில்குமாரை சுல்தான் பேட்டையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக கரடிவாவி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.

    உயரிழந்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமாருக்கு காஞ்சனா(45) என்ற மனைவியும், ஹரிசந்தோஷ்(18) என்ற மகனும், சுபாசினி(26) என்ற மகளும் உள்ளனர்.
    Next Story
    ×