search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்- திருவாரூர் மாவட்ட நீதிபதி பேச்சு
    X

    குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க வேண்டும்- திருவாரூர் மாவட்ட நீதிபதி பேச்சு

    குழந்தை திருமணம் நடைபெறாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நீதிபதி கலைமதி பேசினார்.

    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட நீதிபதி கலைமதி மற்றும் கலெக்டர் நிர்மல்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை முழுமையாக கண்காணித்திட வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றார்.

    மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பேசுகையில் கூறியதாவது:-

    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் குழந்தைகளிடம் அலுவலர்கள் தனியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். அதற்கு உண்டான பொறுப்பு மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு உண்டு. ஆதரவற்ற குழந்தைகள், குழந்தை தொழிலாளர்கள் , போதை பொருட்கள் பயன்படுத்தும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும். இம்மாவட்டத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறாத வகையில் சைல்டு லைன் 1098, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,மாவட்ட சமூக நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் ஆகியோர் இணைந்து அனைத்து பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன்., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜம், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா டார்லிங் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×