search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் ஜெயிலில் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்த செல்போன் சிக்கியது
    X

    வேலூர் ஜெயிலில் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்த செல்போன் சிக்கியது

    வேலூர் ஜெயிலுக்குள் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலுக்குள் கைதிகள் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டது.

    வேலூர் மத்திய ஜெயிலில் கைதிகள் செல்போன் பயன்படுத்துவது சகஜமாகிவிட்டது. கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்களும் ஜெயிலுக்குள் அதிகமாக புழங்குகின்றன.

    குறிப்பாக,ஜெயிலில் அடைக்கப்படும் ரவுடிகள் உள்ளிருந்தபடியே வெளியில் உள்ள கூட்டாளிகளிடம் செல்போனில் பேசி கொலை உள்ளிட்ட குற்றசெயல்களை அரங்கேற்றுகின்றனர்.

    சமீபத்தில், ஜாமீனில் வெளிவந்த சத்துவாச்சாரியை சேர்ந்த ரவுடி வீச்சு தினேஷை நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூர் ராஜா கூட்டாளிகள் கொல்ல முயன்றனர்.

    இந்த சம்பவத்திற்கு ஜெயிலில் இருந்து வசூர் ராஜா செல்போன் மூலம் தான் கூட்டாளிகளுக்கு திட்டம் போட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வசூர் ராஜா திருச்சி ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    இந்த நிலையில், ஜெயிலில் உள்ள 2-வது கண்காணிப்பு கோபுரம் அடியில் இன்று காலை பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்ததை சிறைக் காவலர்கள் பார்த்தனர். அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர்.

    மண்ணுக்குள் ஒரு செல்போன் இருந்தது. கைதிகள் புதைத்து வைத்தது தெரியவந்தது. செல்போனை கைப்பற்றிய காவலர்கள், சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். இதுபற்றி பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    செல்போனை புதைத்து வைத்திருந்த கைதி யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×