search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கிய திட்டங்களுக்கு கருத்து கேட்பு நடத்தாமல் அனுமதி வழங்க கூடாது- தினகரன்
    X

    முக்கிய திட்டங்களுக்கு கருத்து கேட்பு நடத்தாமல் அனுமதி வழங்க கூடாது- தினகரன்

    ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மக்களின் கருத்து கேட்காமலேயே எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் பதிக்கும் திட்டம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரியிடம், தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கோரிக்கை மனு கொடுத்து இருப்பது மக்களுக்காக இயங்க வேண்டிய அரசு தன் கடமையிலிருந்து தவறி, மக்களை தவிர்த்துவிட்டு இயங்க நினைக்கும் எண்ணம் கொண்டதாக அமைந்துள்ளமை மிகவும் துரதிஷ்டவசமானது.

    மக்களின் கருத்துக்கேட்பு கூட்டங்களால், ஏற்படும் கால தாமதத்தால், முதலீட்டாளர்கள் நஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவது இந்த அரசு யாருக்காக இயங்கி கொண்டிருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

    மக்களின் கருத்துக் கேட்பு என்பது முக்கிய திட்டங்களுக்கு அவசியமானது என்று சுற்றுச்சூழல் துறையும் இந்திய அரசியலமைப்பு சட்டமும் வழிவகை செய்துள்ள போதிலும், அதை மறுக்கும் இந்த அரசின் நடவடிக்கைகள் மக்கள் விரோதமானது மட்டுமல்ல சட்டவிரோதமானதும் கூட.

    ஜனநாயகம் எல்லா நிலைகளிலும் காக்கப்பட, மக்களின் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். எனவே மத்திய அரசின் முன் வைத்த கோரிக்கையை அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TTVDhinakaran
    Next Story
    ×