search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    134 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்
    X

    134 அடியை எட்டிய முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்

    தொடர் மழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியை எட்டி உள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது.

    மேலும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் கடந்த மாதம் 127 அடியாக இருந்த முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 134 அடியை எட்டி உள்ளது.

    மீண்டும் 142 அடியை எட்டுமா? என விவசாயிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இதன்மூலம் இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

    அணைக்கு 2495 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 1946 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கடமலைக்குண்டு, வெள்ளிமலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் மூல வைகயாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 3723 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 63.42 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.60 அடியாக உள்ளது. 123 கன அடி நீர் வருகிறது. நீர்திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.60 அடியாக உள்ளது. 141 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 18.8, தேக்கடி 29.2, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×