search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முட்டம் பகுதியில் தூத்துக்குடி வாலிபர் பலி- கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை
    X

    முட்டம் பகுதியில் தூத்துக்குடி வாலிபர் பலி- கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை

    வேலை கேட்டு வந்த தூத்துக்குடி வாலிபர் முட்டம் கடல் பகுதியில் பிணமாக கிடந்ததது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மணவாளக்குறிச்சி:

    வெள்ளிச்சந்தையை அடுத்த முட்டம் கடற்கரையில் இன்று காலை ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இறந்து கிடந்தவர் யார்? என்று விசாரணை நடத்தினர்.

    இதில் முட்டம் கடற்கரையில் கரை ஒதுங்கிய வாலிபர் பிணம்,தூத்துக்குடி மாவட்டம் சவேரியார் புரத்தை சேர்ந்த ஆன்றனி என்பவரின் மகன் சேவியர் சுதன் (வயது 27) என்று தெரியவந்தது.

    சேவியர் சுதன் கடந்த 6-ந் தேதி முட்டம் கடற்கரைக்கு வந்தார். இங்குள்ள நண்பர் ஒருவரின் விசை படகில் வேலை தரும்படி அவரிடம் கேட்டுள்ளார்.

    அதற்கு அந்த நண்பர், தனது விசைபடகு பழுதாகி இருப்பதாகவும், அதனை சரிசெய்யும் பணி நடந்து வருவதாக கூறியுள்ளார். படகை சீரமைத்த பின்பு வேலைக்கு அழைப்பதாகவும் சேவியர் சுதனிடம் அந்த நண்பர் கூறியுள்ளார்.

    அதுவரை காத்திருக்கும்படி கூறியதோடு, அவரது செலவுக்கு ரூ.500 பணமும் கொடுத்துள்ளார். அதன்பின்பு சேவியர் சுதன் திரும்பி வரவில்லை. இதனால் அவர் வேறு படகில் வேலைக்கு சென்றிருக்கலாம் என்று எண்ணிய அந்த நண்பர் இன்று சேவியர் சுதன் இறந்து கிடப்பதை பார்த்த பின்பே அவர் கடலில் மூழ்கி இறந்ததை தெரிந்து கொண்டார். போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரியவந்தது.

    சேவியர் சுதனின் பிரேத பரிசோதனை முடிந்த பின்பே எப்போது அவர் கடலில் மூழ்கினார்? அவர் இறந்து எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்பது பற்றிய விபரங்கள் தெரியவரும். #tamilnews
    Next Story
    ×