search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் பலத்த மழை - ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    ராமநாதபுரத்தில் பலத்த மழை - ராமேசுவரம் கோவிலுக்குள் தண்ணீர் புகுந்தது

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த மழையையொட்டி ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீருடன் கழிவுநீரும் புகுந்தது.
    ராமநாதபுரம்:

    அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.

    தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் அந்த மாவட்டங்களில் நேற்று மழை நீடித்தது.

    ராமேசுவரத்தில் நேற்று இரவு 8 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    ராமநாதசுவாமி கோவில் அருகே உள்ள வடக்கு மற்றும் கிழக்கு வீதிகளில் தண்ணீருடன் சேர்ந்த கழிவுநீர் கோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் புகுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தெரிந்ததும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு மழைநீரை அகற்றினர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 7 மணி வரை 457.80 மில்லி மீட்டர் மழை பெய்ததாக பதிவாகி உள்ளது.
    Next Story
    ×