search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி
    X

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - கிரண்பேடி

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தல்
    வில்லியனூர்:

    தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.

    கவர்னர் கிரண்பேடி இன்று காலை வில்லியனூர் அருகே அகரத்தில் உள்ள லட்சுமி நாராயணா மருத்துவ கல்லூரிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த கல்லூரி நிர்வாகத்தினரிடம் மழைநீரை சேகரிக்க எவ்வளவு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது? மருத்துவ கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? கல்லூரி வளாகத்தில் எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன? என்று கவர்னர் கிரண்பேடி கேள்வி எழுப்பினார்.

    அதற்கு கல்லூரி நிர்வா கத்தினர் மழைநீரை சேமிக்க 20 தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என் றும், கல்லூரி வளாகத்தில் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்றும், கழிவு நீரை சுத்திகரித்து தோட்டங்களுக்கு பயன்படுத்துவதாக பதில் அளித்தனர்.

    இதற்கு பாராட்டு தெரிவித்த கவர்னர் கிரண்பேடி கல்லூரி வளாகத்தில் மேலும் மழை காலங்களுக்குள் 100 மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்றும், 1 லட்சம் மரக்கன்றுகள் நட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும் இதனை செயல்படுத்தி தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கவர்னர் கூறினார்.

    அதோடு தூய்மை இந்தியா குறித்து மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி கேட்டுக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு மழைநீர் சேமிப்பு தொட்டிகளை பார்வையிட்டார்.

    அப்போது அங்கிருந்த பல்கலைக்கழக என்னீயர்களிடம் இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதால் மழை நீரை சேகரித்து நீர் ஆதாரங்களை பெருக்க வேண்டும் என்றும், அதற்காக கூடுதல் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    இந்த ஆய்வின் போது பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங் உடன் இருந்தார்.
    Next Story
    ×