search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்- நீலகிரி கலெக்டர்
    X

    இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்- நீலகிரி கலெக்டர்

    விவசாயிகள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும் என நீலகிரி கலெக்டர் இன்னசெண்ட் திவ்யா கூறியுள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கெங்கரை ஊராட்சி மெட்டுக்கல்லில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 116 விவசாய பயனாளிகளுக்கு விலையில்லா நுண்ணீர் பாசன கருவிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கி கூறியதாவது,

    நீலகிரி மாவட்டம் இயற்கையும் பசுமையும் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது விவசாயம் தான். விவசாயிகளான நீங்கள் மருந்துகள் மூலம் விவசாயம் செய்வதை விட்டு இயற்கை விவசாயம் செய்ய முயற்சிக்க வேண்டும். இயற்கை விவசாயம் செய்ய செலவு மிகவும் குறைவு. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்தில் மிகவும் ஈடுபாட்டுடனும், அக்கறையுடனும் இருக்கின்றீர்கள். எனவே அனைவரும் இயற்கை விவசாயம் செய்து பயனடைய வேண்டுமெனவும், வருங்கால சந்ததியினருக்கு கல்வி அறிவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

    ஆகவே நீங்கள் உங்களுடைய குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து அவர்கள் ஒரு நல்ல நிலையை அடைந்து உங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் தேனீ வளர்ப்பிற்காக 200 தேன் பெட்டிகளை செய்து கொடுத்தநிறுவனத்திற்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2,26,750 காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

    முன்னதாக ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தல் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் தூய்மை பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்நிகழ்ச்சியில் குன்னூர் சாந்திராமு எம்.எல்.ஏ., தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியசாம்ராஜ், தோட்டக்கலை உதவி இயக்குநர் மீராபாய், தோட்டக்கலைத்துறை அலுவலர் சந்திரன் கோத்தகிரி வட்டாட்சியர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர்ஜனார்த்தனன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிவேலன், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
    Next Story
    ×