search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது ஏன்? - பிரமாண பத்திரம் தாக்கல்
    X

    ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது ஏன்? - பிரமாண பத்திரம் தாக்கல்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவி காட்சிகள் நிறுத்தப்பட்டது தொடர்பான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் சந்தேகம் இருப்பதாக எழுந்த சர்ச்சையை நிவர்த்தி செய்ய தமிழக அரசால் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    அதேபோல், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அனைத்து சிசிடிவி காட்சிகளும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.



    இதற்கு சி.சி.டி.வி காட்சிகள் இல்லை என அப்போலோ நிர்வாகம் பதிலளிக்கவே, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான பிரமாண பத்திரத்தை மருத்துவமனை நிர்வாகம் இன்று தாக்கல் செய்தது.

    அதில், ஜெயலலிதாவை அப்போலோவில் அனுமதித்தவுடன் உளவுப்பிரிவு ஐ.ஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவியை நிறுத்திவைக்கச் சொன்னதாகவும், அதனால்தான் நிறுத்திவைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #JayalalithaaDeathProbe #ApolloHospital
    Next Story
    ×