search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விளக்குகள் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.
    X
    விளக்குகள் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    சபரிமலையில் அனுமதிக்க எதிர்ப்பு - தேனியில் விளக்குகள் ஏந்தி பெண்கள் ஆர்ப்பாட்டம்

    சபரிமலை கோவிலில் அனுமதிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டதை மறுபரீசலனை செய்ய கோரி தேனியில் பெண்கள் விளக்குகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala #Womendemonstrated

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பலமான ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பெண்கள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்கள் கைகளில் விளக்குகள் ஏந்தி கோர்ட்டு உத்தரவிற்கு எதிராக கோ‌ஷமிட்டனர்.

    அதன்பிறகு தங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை குடியரசு தலைவருக்கு வழங்கும் வகையில் கலெக்டரிடம் அளித்தனர். அந்த கடிதத்தில் மத வழிபாட்டு பிரச்சினையில் கோர்ட்டு தலையிடக்கூடாது.

    பல ஆண்டுகளாக சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆகம விதிகளின்படி 5 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை. தற்போது அனைத்து வயதினரும் கோவிலுக்கு செல்லலாம் என கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். #Sabarimala #Womendemonstrated

    Next Story
    ×