search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசியில் பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்ட நூதன ஏற்பாடு
    X

    சிவகாசியில் பொதுமக்கள் குப்பைகளை தொட்டியில் கொட்ட நூதன ஏற்பாடு

    சிவகாசியில் குப்பைகளை தொட்டியில் கொட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் நூதன ஏற்பாடு செய்து உள்ளது.
    சிவகாசி:

    சிவகாசி நகராட்சி பகுதியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து மட்டும் தினமும் 44 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சிவகாசி நகராட்சிக்கு என 195 துப்புரவு பணியாளர்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது 140-க்கும் குறைவான தொழிலாளர்கள் தான் இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியில் உள்ள முக்கிய சந்திப்புகளில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டாமல் குப்பைத் தொட்டிகளின் வெளியே கொட்டும் நிலை தொடர்ந்து வந்தது. இதனால் அந்த குப்பைத் தொட்டியின் வெளியே ஆடு, மாடு, நாய், பன்றிகள் கூட்டமாக வந்து கழிவுப் பொருட்களை சாப்பிட்டு குப்பைகளை சாலையின் எல்லா பக்கங்களுக்கும் சிதறி விட்டுச் சென்று விடுகினற்ன. இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியது. மேலும் நோய் பரவ வாய்ப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் குப்பைகளை பொதுமக்கள் தொட்டியின் உள்ளே கொட்டாமல் வெளியே கொட்டி வருவதை தடுக்க நகராட்சி அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தற்போது ஒவ்வொரு குப்பை தொட்டியின் அருகிலும் பெரிய அளவில் கோலம் வரையப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை அந்த கோலத்தின் மீது கொட்டாமல் குப்பை தொட்டிகளில் கொட்டி வருகிறார்கள்.

    கமிஷனர் அசோக் குமாரின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தொடக்கத்தில் இதை பின் பற்ற பொதுமக்கள் தயங்கினாலும் காலப்போக்கில் இதை பொதுமக்கள் பின்பற்றி குப்பைகளை தொட்டியில் போட முன் வருவார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×