search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கயம் இன மாடுகள் ரூ.30 கோடிக்கு விற்பனை
    X

    காங்கயம் இன மாடுகள் ரூ.30 கோடிக்கு விற்பனை

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் சந்தை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 7 ஆயிரம் மாடுகள் ரூ.30 கோடிக்கு விற்பனையானது என்று சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.
    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தகாடையூர் அருகே உள்ள பழைய கோட்டையில் காங்கயம் இன காளைகளுக்கு என்றே பிரத்யேக சந்தை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த சந்தை நடைபெறுகிறது. 7 ஆயிரம் மாடுகள் விற்பனை

    இந்த சந்தையில் காங்கயம் இன கால்நடைகள் மட்டுமே வாங்கவும், விற்கவும் அனுமதிக்கப்படுகிறது. இந்த சந்தை தொடங்கப்பட்டு நேற்றுடன் வெற்றிகரமாக 100-வது வாரத்தை தொட்டது. சந்தை தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 7 ஆயிரம் மாடுகள் ரூ.30 கோடிக்கு விற்பனையானது என்று சந்தை பொறுப்பாளர் தெரிவித்தார்.

    நேற்றைய சந்தை நிலவரப்படி மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரை விற்பனையானது. கிடாரி கன்று ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை விற்பனை விலைபோனது. நேற்று ஒரு நாள் மட்டும் ரூ.38 லட்சத்திற்கு வியாபாரம் நடந்தது.

    இதேபோல் நேற்று நடந்த அந்தியூர் சந்தையில் நாட்டு காளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வரையிலும், நாட்டு கறவை மாடு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. சிந்து மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது.

    Next Story
    ×