search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூட்டுறவு பண்டக சாலைக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம் - அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்
    X

    கூட்டுறவு பண்டக சாலைக்கு ரூ.30 லட்சத்தில் புதிய கட்டிடம் - அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்

    நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ள கட்டிடத்தை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் அருகே மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு சுயசேவை பிரிவு மற்றும் கிடங்கு ரூ.30 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பாலமுருகன் வரவேற்றார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூட்டுறவு சங்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சுயசேவை பிரிவின் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் முன்னாள் தலைவர் சுகுமாரன், நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி தலைவர் டி.எல்.எஸ்.காளியப்பன், வீட்டுவசதி சங்கத்தின் தலைவர் விஜய்பாபு, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபிநாத், ஒன்றிய செயலாளர் குப்புசாமி, சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் சாதிக்பாஷா மற்றும் அரசு அதிகாரிகள், கூட்டுறவு ஒன்றியங்களின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×