search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது- தினகரன் சவால்
    X

    நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது- தினகரன் சவால்

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். #dinakaran #parliamentelection #admk

    பீளமேடு:

    அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா அழைப்பிதழில் உங்கள் பெயர் போட்டு அழைப்பு கொடுத்தும் நீங்கள் ஏன் புறக்கணித்திருக்கிறீர்கள்?

    பதில் : புரோடாகால் படி எம்.எல்.ஏ.க்கள் பெயரை போட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான். உண்மையிலேயே நாங்கள் வர வேண்டும் என்று நினைத்தால் எங்களுடைய அவைல பிலிட்டியை தெரிந்து கொண்டு தான் யாரும் எந்த ஒரு நிகழ்ச்சியையும் வைப்பார்கள்.

    புரோடாகால்படி சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் பெயரை போட்டுள்ளனர். ஈரோட்டில் இன்று அருந்ததியர் சமுதாயம் சார்பாக நடக்கிற மாநாட்டில் நான் பங்கேற்க இருப்பது 2, 3 மாதங்களுக்கு முன்பு திட்ட மிடப்பட்டது. எங்கள் கட்சி நிகழ்ச்சி என்றால் கூட தள்ளி வைத்துக் கொள்ளலாம்.

    அ.தி.மு.க.வில் உயிரோட்டமான தொண்டர்கள் இப்போது இல்லை. ஆட்சி அதிகாரத்தை வைத்து 2 நாளைக்கு 1000 ரூபாய் கொடுத்து சுற்றுலா செல்லலாம் என கூறி இலவச வாகனத்தில் மக்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைத்து செல்கின்றனர். தொண்டர்கள் அவர்களிடம் இருப்பதாக காட்டுவதற்காகவே இது போன்று மக்களை தேடி, தேடி அழைக்கிறார்கள்.

    கேள்வி : உங்களுக்கு முறையாக அழைப்பு கொடுக்கப்பட்டதா?

    பதில்: அரசு நிகழ்ச்சிகளில் வழக்கப்படி அழைப்பிதழில் அந்தந்த சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெயர்களை சேர்ப்பது வழக்கம். ஆனால் நான் ஏற்கனவே திட்டமிட்டடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்க வில்லை.

    கேள்வி : நூற்றாண்டு விழாவுக்காக விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

    பதில் : எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை இவர்கள் கேட்பார்களா? அதேநேரம் அ.ம.மு.க.வின் பிளக்ஸ் பேனர்களை காவல்துறையை வைத்து அகற்றுவது என்பது கேவலமான செயல். உயர் நீதிமன்றம் சொல்லியும் எஸ்.வி.சேகர், எச்.ராஜா இவர்கள் இருவரையும் ஏன் கைது செய்யவில்லை?

    கேள்வி : எச்.ராஜா விவகாரம் குறித்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் : அமைச்சர் பதவியில் இருப்பதால் ஆர்.பி. உதயகுமார் மேதாவிகள் போல பேசுகிறார்? பொறுப்பு இல்லை எனில் யாரும் இவரை சீண்ட மாட்டார்கள்.

    கேள்வி : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதியிலும் வெற்றி பெறும் என தம்பிதுரை கூறி உள்ளாரே?


    பதில் : வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. இதை அவர்களுக்கு ஒரு சவாலாகவே கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக விமான நிலையத்தில் டி.டி.வி. தினகரனுக்கு கோவை மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மாநில அமைப்பு செயலாளரும், கொங்கு மண்டல பொறுப்பாளருமான சேலஞ்சர் துரை தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் முன்னாள் அமைச்சர்கள் தாமோதரன், உடுமலை சண்முகவேல், புறநகர் மாவட்ட செயலாளர் சுகுமார், தெற்கு மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அகஸ்டஸ், பொற்காலம் ராஜா, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கணேஷ்குமார், வடக்கு மாவட்ட பொருளாளர் எஸ்.என்.ஆர். ராமலிங்கம், வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயசுதா, மாணவரணி மாவட்ட செயலாளர் சஞ்சீவிநாதன், பகுதி செயலாளர்கள் தங்கவேலு, நாகராஜ், ஜெயராஜ், மற்றும் கோபிநாத், மா.பா. ரோகிணி, அமைப்புச் செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். #dinakaran #parliamentelection #admk

    Next Story
    ×