search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம்
    X

    வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாம்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். குன்னம் தாசில்தார் சிவா வரவேற்றார். முகாமில் 2000-ம் ஆண்டு பிறந்த வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத மாணவிகளிடம் நம்பர் 6 என்ற படிவத்தை வழங்கி பூர்த்தி செய்து பெற்று கொள்ளப்பட்டது.

    முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் மனோகரன், வரகூர் வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அதிகாரிகள், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல, துணை வட்டாட்சியர் சுரேஷ் நன்றி கூறினார். 
    Next Story
    ×