search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முக ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது- தம்பிதுரை
    X

    எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முக ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது- தம்பிதுரை

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பது வருத்தம் அளிப்பதாக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை கரூர் விஸ்வநாதபுரி பகுதியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை தி.மு.க. புறக்கணிப்பது வருத்தம் அளிக்கிறது. இது அரசு விழா என்பதால் அவர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அறிஞர் அண்ணா, தேர்தலின்போது எம்.ஜி.ஆர். இல்லாமல் தி.மு.க. வெற்றி கொள்ளாது என கூறினார்.

    மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்றியதை பார்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு எம்.ஜி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது. அதேபோல் கலைஞரும் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

    எம்.ஜி.ஆர். தனியாக கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து இருக்காவிட்டால் தேசிய கட்சிகள் வலுவாக காலூன்றி இருக்கும். தமிழகத்தில் என்றும் திராவிட கட்சிகள் ஆட்சி செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர்.


    அண்ணாவுக்கு பிறகு கருணாநிதியை முதல்- அமைச்சராக்க பணியாற்றியவர் எம்.ஜி.ஆர். அந்த நன்றியை மு.க.ஸ்டாலின் மறந்து விடக்கூடாது.

    எனவே கட்சி ரீதியாக பார்க்காமல் இதை அரசு விழாவாக கருதி மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்க வேண்டும். காங்கிரசோடு அ.தி.மு.க. தொடர்பில் உள்ளது என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினால் தி.மு.க-காங்கிரசை விட்டு விலகி செல்கிறது என்றுதான் பொருள்.

    இதனைத்தான் நான் பலமுறை கூறியுள்ளேன். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MGRCenturyFestival #ADMK #ThambiDurai #MKStalin
    Next Story
    ×