search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை மாரத்தான் ஓட்டம் 29-ந்தேதி நடக்கிறது
    X

    ராமநாதபுரத்தில் தூய்மையே சேவை மாரத்தான் ஓட்டம் 29-ந்தேதி நடக்கிறது

    ராமநாதபுரம் நகரில் வருகிற 29-ந்தேதி தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தூய்மையே சேவையை அடிப்படையாக கொண்டு கடந்த 15-ந்தேதி முதல் சுற்றுப்புறத் தூய்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராமநாதபுரம் நகரில் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தூய்மையே சேவை விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.

    35 வயதிற்குட்பட்டவர்கள், 35 வயதிற்கு மேற்பட்டவர்கள் என ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் தனித்தனியே நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட உள்ளது.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலை 7.30 மணிக்கு தொடங்கி பட்டணம் காத்தான் நான்கு வழிச் சாலை சந்திப்பில் நிறைவடையும்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு, சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரத்து 500, மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

    போட்டிகளில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் 27, 28 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 7.30 மணி வரை பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்திலும், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல் 80983 87791, 97865 08157, 97902 04497 ஆகிய மொபைல் எண்களிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×